பாக்யராஜ்
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார். மணிவண்ணன்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மணிவண்ணன் அவர் இயக்கிய நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
மனோபாலா
பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றிய மனோபாலா தற்போது பிரபல காமெடி நடிகராக புகழ் பெற்று வருகிறார்.
சித்ரா லெட்சுமணன்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சித்ரா லட்சுமணன் சூரசம்ஹாரம், பெரிய தம்பி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.மேலும் பாரதிராஜவின் மண்வாசனை மற்றும் மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.மேலும் இவர் பல படங்களில் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்..
மனோஜ்குமார்
பாரதிராஜாவின் உறவினரான மனோஜ்குமார் இயக்கிய முதல் படமான மண்ணுக்குள் வைரம் (1987) அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றது. மேலும் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் புகழ்பெற்றவர் இவர்.இவர் இயக்கிய சில படங்கள்..வெள்ளைதேவன் (1990), பாண்டித்துரை (1992), சாமுண்டி (1993), மறவன் (1994), வண்டிச்சோலை சின்னராசு (1996), ராஜபாண்டி (1997), செந்தமிழ்ச்செல்வன் (1998), குருபார்வை (1999), வானவில் (2000), ராஜ்ஜியம் (2002)
பொன்வண்ணன்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன்வண்ணன் அன்ன வயல் , ஜமீலா போன்ற படங்களை இயக்கியவர்.. பிறகு தன்னை நடிகராக மாற்றிக்கொண்டு தற்போது பிரபல நடிகராக இருந்து வருகிறார்.உடன் நடித்த நடிகை சரண்யாவை திருமணம் செய்துகொண்டார்.
No comments:
Post a Comment