இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் பல புதிய நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. அவர்களுள் பிரபலமான நடிகர்கள் பற்றியும் அவர்கள் அறிமுகமான படங்கள் பற்றியும் பார்க்கலாம்.அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் மிக உச்சத்தை அடைந்து இன்னும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறார்.
அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் சுஜாதா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர். பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரையும் அறிமுகம் செய்தார்.
மேலும், நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலமாக ஷோபா, சரத்பாபு ஆகியோரையும் தப்புத்தாளங்கள் படத்தில் சரிதாவையும் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் திலீப் அறிமுகப்படுத்தியிருந்தார் பாலச்சந்தர். நாடகக்கலைஞர்களா இருந்த எஸ். வி. சேகரை வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்திலும் , நிழல் நிஜமாகிறது படத்தில் மௌலியையும் நவகிரகம் படத்தின் மூலமாக ஒய். ஜி. மகேந்திரனையும், பட்டினப்பிரவேசம் படத்தின் வாயிலாக காத்தாடி இராமமூர்த்தி மற்றும் மேஜர் சந்திரகாந்த் படத்தில் மேஜர் சுந்தரராஜன் ஆகியோரையும் திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார்.
மன்மதலீலை படத்தின் மூலம் ராதாரவியையும் டூயட் படத்தில் பிரகாஷ்ராஜையும் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ஆவார்.

No comments:
Post a Comment