ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பரான கமல்ஹாசன் ஆகியோர் எப்போது நேருக்கு நேர் மோதிக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.. அரசியல் களத்தில் குதிக்க தயாராகிவிட்டேன் என்று ரஜினிகாந்த அறிவித்த நிலையில் அவருக்கு முன்னதாக முந்திக்கொண்டு தனது மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து விட்டார் கமலஹாசன்..
தற்போது ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லையென்றாலும் அதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.. இவரும் உடனே கட்சியைத் தொடங்கினால் வருகிற சட்ட மன்ற தேர்தலில் இருவரும் மோதிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. அவருடன் சேர்ந்து பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சார் சான்றிதழ் கூட பெறப்பட்டுவிட்டது.
ஆனால் இன்னும் இப்படத்தை வெளியிடும் தேதி குறித்து எந்தவொரு தகவலும் தரப்படவில்லை, ஏனென்றால் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள படம் காலா.. இப்படத்தை தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலா’ ரிலீஸுக்குப் பிறகே தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். அரசியலில் ரஜினிகாந்தை முந்திக்கொண்ட கமல்ஹாசன் படத்தை ரிலீஸ் செய்வதில் முந்திக்கொள்ளவில்லை.. முந்திக்கொள்ள விரும்பவில்லை.. தெரிந்தும் நஷ்டப்பட்டுக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் ரஜினிகாந்திற்கு இணையாக ரசிகர் பட்டாளம் தனக்கில்லை என்று நன்கறிந்தவர் கமலஹாசன்..தன்னுடைய செல்வாக்கை வளர்த்திக்கொள்ள இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி காலா படத்தை ரிலீஸ் செய்யும் அதே தினத்தில் தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்யலாம் ஆனால் அந்த திட்டம் கமலிடம் இல்லை.. சினிமாவில் ரஜினியை வீழ்த்த முடியாது என்று தெரிந்த கமல் அரசியலில் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறார் பார்ப்போம் யார் வெற்றி பெறப்போகிறார் என்று!
No comments:
Post a Comment