கதை அம்சம்சங்கள் நிறைந்த சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆள் இல்லாமல் தவித்த திரையுலகில் ஆதரவுக்கரமாக விளங்கியவர் விஜய் சேதுபதி. ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய்சேதுபதி. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. தற்போது, அந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள். இது கோடம்பாக்கத்திலுள்ள உதவி இயக்குநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி .இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு ரஜினி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
”படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போது தான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் பின்னர் தயாரிக்கலாம்” என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்தாரம் ரஜினி.
நல்ல கதை அம்சம் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பாரா இல்லை ரஜினி யின் பேச்சுக்கு கட்டுப்படுவாரா பொருத்திருந்து பார்ப்போம்..அவரு பலகோடி சம்பாதிப்பாரு ஆனா படங்கள் தயாரிக்க மாட்டாரு தயாரிக்க வந்தவரையும் அதையும் இதையும் சொல்லி கன்பியூஸ் பண்றார் என ரஜினிகாந்த் மீது கோபத்தில் உள்ளனர் பல உதவி இயக்குனர்கள்..

No comments:
Post a Comment