அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகேஷ்.. அதன்பிறகு காணமல் போய்விட்டார். அறிமுக இயக்குநர் ராம்சேவ், ‘என் காதலி சீன்போடுறா’ என்கிற படத்தில் இப்பொது இணைந்திருக்கிறார். தெலுங்குஇறக்குமதி ஷாலு ஹீரோயின். தவிரகோகுல், ஆடுகளம் நரேன், மனோபாலாஉட்பட பலர் நடித்துள்ளனர். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவை கலந்த படைப்பாக இப்படம்உருவாகி உள்ளதாம்.
கவலைகளை மறந்து எப்போதும்மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனும்கருத்தை வலி யுறுத்துகிறார்களாம். இது அனைத்துத்தரப்பினருக்குமான படம் என்கிறார் இயக்குநர்ராம்சேவா.பச்சக்குன்னு தலைப்பு மனசுலே பதியணும். அதுக்காகத்தான் இப்படி வெச்சிருக்கோம். காதல்கதைதான். ஆனா, அதுக்குள்ள ஒருஅழுத்தமான கருத்தையும் ெவச்சிருக்கோம். எல்லா சந்தோஷங்களுக்கு பின்னாலும்ஒரு வருத்தம் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும். அதை கண்டுபிடிச்சு உடனேதீர்த்துடணும். இல்லைன்னா, அதிலிருந்து வெளியில் வர கத்துக்கணும். அதுவும்இல்லைன்னா, அது பெருசா வளர்ந்து, நம்ம மொத்த சந்தோஷத்தையும் கெடுத்துடும். இப்படி ஒரு கனமான விஷயத்தைசிரிக்கச் சிரிக்க சொல்லி, கடைசியாசிந்திக்கவும் வைக்கிற கதை இது.
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் வாழ்நாளின் இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது எவ்வளவு முக்கியமோஅதே அளவுக்கு நாம் அனைவரும் ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும் என்பதும் முக்கியம். “சற்றே அஜாக்கிரதையாக இருந்தாலும்கூட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். அவை நம் வாழ்க்கையைஒட்டுமொத்த மாக மாற்றியமைத்துவிடும். இந்தக் கருத்தையும்உள்ளடக்கி இப்படத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கிறார் ராம்சேவா.அங்காடித்தெரு’வுக்குப் பிறகு மகேஷூக்கு அவர்திறமையை வெளிக்காட்ட பெருசா படம் அமையலை. ஒரு டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதைஅப்படியே ஸ்கிரீனில் கொண்டுவர்ற திறமைசாலி. பிறகு ஏன் அவருக்குசரியான வாய்ப்பு கிடைக்கலைன்னு தெரியலை. ஆனா, இந்தப் படத்தில்நிச்சயமா அவரோட திறமை பேசப்படும். ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்கிற மகனாநடிக்கிறார். நிறைய ஹீரோயின்களை தேடினோம். கதைக்கு பொருத்தமான சில முகங்கள் கிடைச்சாலும், நிறைய காரணங்களால் அவங்களால் நடிக்க முடியாமப் ேபாச்சு. அப்பதான் ஷாலு நடிச்ச ஒருதெலுங்கு படத்தை பார்த்து அவரைசெலக்ட் பண்ணோம். தமிழில் பேசத் தெரியலைன்னாலும், நான் நடிச்சுக் காட்டியதை ெவச்சு, அதைவிட பிரமாதமாநடிச்சாங்க.ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்த கோகுல், இதில்வித்தியாசமான கேரக்டர் பண்றார். தங்கை மேல் உயிரையேெவச்சிருக்கும் அண்ணன் கேரக்டர். ஆனா, அந்த பேரன்புதான் அவருக்கு மிகப் பெரிய பிரச்னை.
படம் முழுக்க வரும் மனோபாலா, சோலோ காமெடியனா கலக்கி இருக்காரு. பக்காவாபிளான் பண்ணதாலதான், இந்த படத்தை திட்டமிட்டபடிமுடிக்க சாத்தியமாச்சு. ஸ்கிரிப்ட், காஸ்டிங் ஓக்கே ஆனதும், எந்தகாட்சியை எங்கே எடுக்கப் போறோம்னுமுடிவு பண்ணி, அந்த இடத்துக்குபோய், இப்படித்தான் சீன் இருக்கணும்னு தீர்மானிச்சுபடத்தை உருவாக்கினோம். அதுக்கு கேமராமேன் ெவங்கட்நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அம்ரீஷ் மியூசிக்கில் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஜோடி சேர்ந்து, ‘நிலாகல்லுல செதுக்கிய சிலையே’ என்ற டூயட்டைபாடியிருக்காங்க. ‘சின்ன மச்சான்’ ரேஞ்சுக்குஇந்தப் பாட்டும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை இருக்கு” என்று நம்பிக்கையோடு பேசினார்.
படம் முழுவதும் நகைச்சுவை சற்றே தூக்கலாக இருக்குமாம். அதேசமயம் வணிக ரீதியிலான அம்சங்களும்இடம்பெற்றிருக்குமாம். மனோபாலா இடம்பெறும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்என்று உத்தரவாதம் அளிக்கும் ராம் சேவா, சென்னைமற்றும் பாண்டிச்சேரியில் 23 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, எடிட்டிங்கில் பிசியாகஇருக்கிறார்.


No comments:
Post a Comment