சண்டை போடத் தயாராகும் அக்‌ஷரா ஹாசன் - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 31, 2018

சண்டை போடத் தயாராகும் அக்‌ஷரா ஹாசன்


அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘சமிதாப்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கமலஹாசனின் இளைய மகள் அக்‌ஷ்ரா அதன் பின் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார்.. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை..என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று வெப் சீரியல் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார்.. அத்தோடு நில்லாமல் அந்த சீரியல் சிறப்பாக வருவதற்காக கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.. என்ன பயிற்சின்னு கேட்குறீங்களா? அவங்களே சொல்றாங்க கேளுங்க.. 



"சமீபகாலமாக நான் முறைப்படியும் கடுமையாகவும் ஸ்டண்ட் பயிற்சி பெற்று வருகிறேன். புதிதாக உருவாகும் ‘குட் பய் கேர்ள்’ என்ற வெப் சீரியலில் நடிக்கிறேன். இதற்காகத்தான் சண்டை பயிற்சி பெறுகிறேன். இதற்கு முன் இதுபற்றி எனக்கு கொஞ்சமும் தெரியாது என்பதால் பதற்றத்துடன் பயமும் கலந்திருக்கிறது. சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வருகிறது. அதேசமயம் சில வித்தியாசமான அணுகு முறைகள் வெப் சீரியல்களில் காட்ட முடியும் என்று எண்ணுகிறேன். கதை சொல்லும் விதமும் வித்தியாசமாக இதில் அமைக்கப்படுகிறது. எனவேதான் வெப் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. பட ஸ்கிரிப்ட்டும் இதேபோல் என்னை கவர்ந்தால் உடனே ஏற்பேன்’

வேறென்ன சொல்ல சண்டைக்கு தயாராயிட்டாங்க அவ்வளவுதான்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages