நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இயக்குநர்களுக்கு போடப்பட்ட கண்டிஷன்தான் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. அப்படி என்ன சொல்லிவிட்டார்?..
''முன்பெல்லாம் டாஸ்மாக் மதுக்கடை காட்சியில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். இப்போது அதன் கொடிய தாக்கம் எனக்கு புரிந்திருக்கிறது. இனி என் படத்தில் டாஸ்மாக் காட்சி இருக்காது. மேலும் பெண்களை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகளும் இருக்காது’ என்று கூறியிருக்கிறார். இதில் காமெடி என்னவென்றால் இவர் படங்களில் இவ்வாறான காட்சிகள் கட்டாயம் இருக்கும்.. இவரது பேட்டியைக் கேட்ட இயக்குநர் ராஜேஷ் ஆடிப்போயிருக்கிறார்.. ஏனென்றால் இவ்வாறான காட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க காத்திருக்கிறார் ராஜேஷ் .. என்ன செய்யப்போகிறாரோ தெரியவில்லை..

No comments:
Post a Comment